யாழ்.சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் நேற்றையதினம்(16.06.2023) ஆராயப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விஸ்தரிப்பதுடன் விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பாரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் தொடர்ந்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் இறங்குதளம் விஸ்தரிக்கப்பட்ட வேண்டுமெனவும் மக்களுடைய காணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மேலும் நிலங்கள் சுவிகரிக்கப்படாமல் எப்படியாக செய்ய முடியும் என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

கூடுதலாக விமான நிலையத்தின் வடக்கு பக்கம் அதாவது கடல் பக்கம், இயன்றளவு ஓடுதளத்தை விஸ்தரித்து , தெற்கு பக்கத்தில் மிக சொற்ப அளவிலான காணிகளை எடுத்து இந்த விஸ்தரிப்பு நடவடிக்கை இணை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஸ்தரிப்பு தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர், விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews