அதிக வரி அறவீட்க்கு எதிராக வர்த்தகர்கள் போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.
மே மாதம் தொடக்கம் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 1500 ரூபா வரி மற்றும் கழிவகற்றலுக்காக 600 ரூபாவுமா ஒவ்வொரு வியாபாரியிடமும் மாதாந்தம் பெறப்பட்டு வந்த நிலையில் மே மாதம் தொடக்கம் 7500 ரூபா வரியாகவும் 600 ரூபா கழிவகற்றலுக்கும் என 8100 ரூபா அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தே சந்தை வியாபாரிகள் தங்களது வர்த்தக நிலையங்ளை மூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தீர்வு பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.