சர்வதேச நிகழ்விற்கு தெரிவான இலங்கைச் சிறுவர்கள் : உதவி கேட்டு நலன்விரும்பிகளிடம் கோரிக்கை

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள உலகின் மிகப்பெரிய நடன நிகழ்வான வேர்ல்ட் ஒப் டான்ஸ் (WORLD OF DANCE) நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து 5 தமிழ் சிறுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். உலகிலுள்ள 25 நாடுகளின் பங்கேற்பாளர்களுடன் 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து நடனக்குழு தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையின் கொட்டஹேனா மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் இயங்கிவரும் C.J DANCE LAB நடனப் பள்ளியில் பயிலும் மாணவர்களே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கலிபோர்னியாவில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு உலகத் தரம் வாய்ந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கு இலங்கை சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளபோதும் போதிய பொருளாதார வசதிகள் இன்மையால் அவர்கள் அந்நிகழ்ச்சிக்கு செல்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. நடன நிகழ்ச்சிக்கான 3 பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு செல்லவேண்டிய நிலையில், அமெரிக்க குடிவரவு விதிமுறைகளின்படி 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அந்நாட்டிற்கு செல்லவேண்டுமாயின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடனேயே செல்லவேண்டும். தற்போது நிகழ்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 5 சிறுவர்களும் 13 வயதிற்குட்பட்டவர்களாவர்.

நிகழ்வில் பங்குபற்றுவதற்கு 10 நாட்கள் வரையில் அங்கு தங்கவேண்டியுள்ள நிலையில், விமானச் சீட்டிற்கான கட்டணங்கள், தங்குமிடம் மற்றும் உணவிற்காக அதிக தொகை செலவுசெய்யவேண்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தொகையைப் பெற்றுக்கொள்வது பாரிய சவாலாக இருந்தாலும் சிறுவர்களுக்கு கிடைத்த இந்த பிரம்மாண்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகின்றது. இதற்காக பலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் பலர் அதை நிராகரிக்கும் நிலையே காணப்படுகின்றது. இதனால் உதவும் நபர்களிடம் அவர்கள் தங்களுக்கான உதவிகளை எதிர்பார்க்கிறாhர்கள்.

உதவ முன்வருவோர் 0776959555 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ, 128/2, காலி வீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்துடனும், cjsdancelab என்ற இன்ஸ்டாகிராம் மற்றும், cjs dance lab the indian dance school என்ற பேஸ்புக் பக்கத்தினூடாகவும் அழைப்பினை ஏற்படுத்தமுடியும்.

Recommended For You

About the Author: Editor Elukainews