மலையகம் வடக்கு – கிழக்கு உறவு அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்..!

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது அகஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. அதுவும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு இந்நெருக்கடி அதிகமாக இருக்கும். இலங்கைத்தீவைப் பொறுத்த வரை இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மலையக மக்கள், முஸ்லீம் மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். மலையகம் 200 நிகழ்வை மேற்கொள்ளும் போது இந்த விவகாரம் மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
மலையகம் 200 நிகழ்வைக் கொண்டாடுவது என்பது வெறும் சடங்கல்ல. அது மலையகத்தின் கடந்தகாலம் எப்படியிருந்தது அதன் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி எவ்வாறு நகருவது என்பதை திட்டமிடுவதாக இருக்க வேண்டும்.
இதன் போது தான் புற ஆற்றல் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றையும் இணைத்துக் கொண்டு ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து செல்வதற்கான மார்க்கங்களையும் கண்டாக வேண்டும். மலையக மக்களைப் பொறுத்தவரை சென்றவாரக்கட்டுரையில் குறிப்பிட்டது போல அடிப்படை சக்திகளாக இருப்பவர்கள் மலையகத்தில் வாழும் மக்களும் இலங்கைத்தீவிலும் தமிழ்நாடு உட்பட புலம்பெயர்; நாடுகளிலும்  வாழும் மலையக வம்சா வழியினராவர்;. ஈழத்தமிழர்கள்;இ தமிழ்நாட்டுத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள்; நல்ல சேமிப்புச் சக்திகளாவர். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும்; முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்பு சக்திகளாவர்;.
இங்கே சேமிப்பு சக்திகள் என்ற வகையில் தான் வடக்கு – கிழக்கு தமிழர்களுடனான உறவு மலையக மக்களைப் பொறுத்த வரை முக்கியமாகின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்ற வகையிலும்இ பரஸ்பர ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்பவர்கள் என்ற வகையிலும் இனம், மொழி என்கின்ற தொப்புள் கொடி உறவினால் பிணைக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும், இரு பிரதேசங்களிலும் இரு தரப்பு மக்களும் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும் இந்த உறவு முக்கியமானது.
வரலாற்றில் இந்த உறவுக்கு ஒரு தொடர்ச்சி இருந்திருக்கின்றது. இந்தத் தொடர்ச்சியில் ஒரு தரப்பு தொடர்பாக மற்றய தரப்பு அக்கறை காட்ட தயங்கியிருக்கவில்லை. வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் இணைந்;தும்; , தனித்தும் அந்த அக்கறையைக் காட்டி வந்தனர். மலையக மக்களின் வரலாறு பல்வேறு கால கட்டங்களாக நகர்ந்திருக்கின்றது. 1823-1919, 1919-1935, 1935-1947, 1947-1977, 1977-1989, 1989 க்குப் பின்னர் என்பனவே அக்கால கட்டங்களாகும் முதலாவது கால கட்டமான  1823-1919 கால கட்டம் ஒரு இருண்ட கால கட்டமாக இருந்தது. மலையக மக்கள் பெருந்தோட்டங்கள் என்ற திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழ விடப்பட்டனர். வெளியார் எவரும் தோட்டங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இரண்டாவது கால கட்டமான 1919-1935 காலத்தில் இப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. அம்மாற்றத்தை முதன் முதலில் தொடக்கி வைத்தவர்கள் வட – கிழக்கு வம்சா வழியினரான சேர். பொன். அருணாசலமும் மலையக வம்சா வழியினருமான பெரிசுந்தரமுமே ஆவார். 1919ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கம்(ஊநுலுடுழுN றுநுடுகுயுசுநு டுநுயுபுருநு) எனும் அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டனர். சேர். பொன். அருணாசலம் இவ் அமைப்பின் தலைவராகவும், பெரிசுந்தரம் செயலாளராகவும் பதவி வகித்தனர். பெரிசுந்தரம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாவார். 1931 தொடக்கம் 1936 வரை ஹட்டன் தொகுதியின் சட்ட சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார். இவ் அமைப்பு 1920ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் கூட்டுக்கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 5000 தொழிலாளர்கள் வரை இதில் அங்கம் வகித்திருந்தனர். மலையகத்தில் நிலவிய துண்டு முறைக்கு எதிராக இவ் அமைப்பு குரல் கொடுத்தது. துண்டு முறையென்பது திருமணம் காரணமாகவோ அல்லது வேறு தேவைகள் காரணமாகவோ ஒரு தோட்டத்திலிருந்து இன்னோர் தோட்டத்திற்குச் சென்று வசிக்க வேண்டியிருந்தால் முன்னய தோட்ட நிர்வாகம் இவருக்கு எந்தவித கடனுமில்லை, நல்ல நடத்தையுடையவர் என கடிதம் கொடுக்க வேண்டும். இந்தத் துண்டு முறை ஒரு அடிமை முறையை ஒத்திருந்தது. இலங்கைத் தொழிலாளர் கூட்டுக்கழகம் இதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து அதனை இல்லாமல் செய்தது.
சேர்.பொன்.அருணாசலமும் பெரிசுந்தரமும் இம் முதலாவது கட்டத்தைத் தொடக்கி வைத்தாலும் இதனை நகர்த்தியவர் நடேசையர் தான். பத்திரிகையாளரான நடேசையர் தோட்டத் தொழிலாளர்கள் படும் அவல நிலையைக்கண்டு அவர்களுக்காக செயலாற்ற முன்வந்தார். இவர் யு.நு. குணசிங்காவின் இலங்கைத் தொழிற்;சங்கத்தின் உப தலைவராக இருந்தவர். யு.நு. குணசிங்கா இன வாத நிலைப்பாட்டை எடுத்த பின்னர் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார்.
பெருந்தோட்டங்களில் நிறுவன ரீதியான அரசியலைத் தொடக்கி வைத்தவர் இவர் தான். தோட்டங்களுக்குள் வெளியார் செல்லக் கூடாது என்கின்ற விதிமுறைகளையும் மீறி தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களை அணிதிரட்டினார். 1936ஆம் ஆண்டு தொடக்கம் 1947 வரை ஹட்டன் தொகுதியின் சட்ட சபை உறுப்பினராகவும் விளங்கினர். நடேசையர் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட “சுதந்திரன்” பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்றாவது கால கட்டம் (1935-1947) இடது சாரிகள் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய கால கட்டமாகும். 1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும், முதலாவது இடதுசாரிக் கட்சியுமான லங்காசமாஜக் கட்சி (டுளுளுP) உருவாக்கப்பட்டது. கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா தலைவராகவும், வேர்ணன் குணசேகரா, பி.ஜே.பெர்னான்டோ இணைச்செயலாளர்களாகவும் பதவியேற்றனர்.
1936ஆம் ஆண்டு பெருந் தோட்ட முகாமைத்துவம் பற்றி கல்வி கற்பதற்காக இலங்கை வந்த அவுஸ்ரேலியரான பிரஸ் கேடில் தோட்ட நிர்வாகிகளால் தொழிலாளர்கள் மோசமாக ஒடுக்கப்படுவதைக் கண்டு லங்காசமாஜக் கட்சியில் இணைந்தார். கட்சி மூலம் தோட்டத் தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். இவருக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு கட்சியின் செயற்பாடுகளினால் தோற்கடிக்கப்பட்டது.
1939ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி லங்காசமாஜக் கட்சி தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கியது. 1939 மார்கழியிலும் 1940 ஜனவரியிலும் மலையகத்தில் இடம் பெற்ற முல்லோயா போராட்டத்திற்கு லங்காசமாஜக் கட்சி தலைமை தாங்கியது. இப் போராட்டத்தில் பொலிசார் சுட்டதினால் கோவிந்தன் என்கின்ற தொழிலாளி 1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி மரணமானார். இவர் இறந்த தினமே மலையகத் தியாகிகள் தினமாக இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. கே.ராமநாதனை ஆசிரியராகக் கொண்டு “  சம தர்மம்” என்ற பத்திரிகையையும் மலையக மக்களுக்காக லங்காசமாஜக் கட்சி நடாத்தியது. கொல்வின் ஆர். டி. சில்வா “கோவிந்தன்” என்ற புனை பெயரில் அரசியல் கட்டுரைகளையும் எழுதினார். தோட்டப்புறங்களில் போராட்ட அரசியலைத் தொடக்கி வைத்தது லங்காசமாஜக் கட்சிதான்.
1939ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் 1950களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. அது கொழும்பு நகரத்தில் வாழ்ந்த இந்திய வம்சா வழியினருக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. நேருவின் ஆலோசனையின் பேரிலேயே அது பெருந்தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது இதற்காக 1940 ம் ஆண்டு அப்புத்தளை கதிரேசன் கோவிலில் வைத்து இலங்கை இந்தியர் காங்கிரஸ் தொழிங்சங்கம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ் அமைப்பு பெருந்தோட்டங்களில் காலூன்றியது எனக் கூற முடியாது. தொண்டமான் இவ் அமைப்புக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னரே காலூன்ற ஆரம்பித்தது.
மலையக அரசியலுக்கு இன ரீதியான பரிணாமத்தை கொடுத்தது இலங்கை இந்திய காங்கிரஸ் தான். இதன் பின்னர் தான் மலையகத்தில் நிலவிய வர்க்க அரசியல் இன அரசியல் என்ற அடையாளத்தைப் பெறத் தொடங்கியது. மலையக ஆய்வாளரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளருமான காதர் இலங்கை இந்திய காங்கிரசை மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாக அடையாளப்படுத்துகின்றார். நிலப்பறிப்புக்கு எத்pரான உருளவள்ளித்தோட்டப் போராட்டம் தொண்டமானை மலையக தேசிய இயக்கத் தலைவராக அடையாளப்படுத்தியது.
சேர்.பொன்.அருணாசலத்திற்குப் பிறகு தந்தை செல்வா தலைமை நிலைக்கு வரும் வரை வடக்கு – கிழக்கு தரப்பு மலையக மக்கள் மீது பெரிய அக்கறை காட்டியது எனக் கூற முடியாது. இடது சாரிகள் மேலாதிக்கம் வகித்ததினால் வர்க்க அரசியல் காரணமாக இக்காலத்தில் தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய ஜீ.ஜீ.பொன்னம்பலம் கரிசனை காட்டவில்லை. பிரஸ்கேடில் விவகாரம் டொனமூரின் சட்ட சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் அரசாங்கத்திற்கு சார்பாகவே வாக்களி;த்தார்.
1949 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி தந்தை செல்வா தலைமையில் அகில இலங்கை தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற பின்னர் மலையக மக்கள் மீதான அக்கறை வடக்கு – கிழக்கு அரசியலில் ஒரு கொள்கை நிலைப்பாடாக மாறியது. இம்மாற்றத்திற்கு காரணமானவர் தந்தை செல்வா தான் தமிழரசுக்கட்சி காலத்தில் இந்த அக்கறை எவ்வாறு வகித்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

Recommended For You

About the Author: Editor Elukainews