தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடனனான விசேட கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல்நேற்று பகல் 2 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் 113 தனியார் கல்விநிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின்போது, மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், பொலிசார், சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் கல்வி நிலையங்களில் 63 கல்வி நிலையங்கள் பிரதேச சபைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 53 கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.