நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபாவாகவும்,
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபா குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும்,
ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.