அராலி இந்துக் கல்லூரியின் பிரதான நுழைவாயில் திறப்புவிழாவானது இன்றையதினம், கல்லூரியின் அதிபர் பாலசுந்தரம் பாலகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் கல்லூரியின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, நினைவுக்கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் பிரதான நுழைவாயில் சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா சுகந்தன், கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் சதாசிவம் செல்வராசா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்விசாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நுழைவாயிலானது கல்லூரியின் 1993ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண மாணவர்களது நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.