கதிர்காம கந்தனை தர்சிப்பதற்காக தனது கடையை பூட்டிச் சென்ற நிலையில் பலசரக்கு கடையின் கதவை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கடையின் உரிமையாளார் கடையை பூட்டிவிட்டு கதிர்காம கந்தனை தர்சிக்க சென்றுள்ள நிலையில் கடையின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை அப்பதி மக்கள் கண்டு கொண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற தடவியல் பிரிவு பொலிசாh அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுத்துவரும் நிலையில் பணம் வைத்துள்ள பெட்டி உடைக்கப்பட்டு அங்கு பணம் திருட்டுப் போயுள்ளதாகவும் கடை உரிமையாளரை தொடர்பு கொண்டபோது கதிர்காமத்தில் இருப்பதாகவும் அவர் திரும்பி வந்த பின்னர் ஏனை பொருட்கள் திருட்டுபோயுள்ளதா என கண்டறியமுடியும் என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.