அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று பெற்றது.
எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டை மீனவ மாவட்டங்களுக்கு பகிர்தல் தொடர்பாகவும், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அ.அன்னராசா,
இன்று வடக்கு மாகாணத்தோடு 15 கடலோர மாவட்டங்கள் இணைந்து மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாகவும், இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் கஷந்துரையாடப்பட்டது. அதே போன்று இலங்கையிலே இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பேர்ள் கப்பலின் பாதிப்புக்கு வழக்கு தொடர்வது சம்பந்தமாக கடந்த வாரம் இந்தக் கடற்றொழில் அமைப்பினர் ஒவ்வொரு மாவட்ட மீனவர்களோடும் கலந்துரையாடிச் சென்றனர்.
நீர்கொழும்பு சட்டத்தரணி நிமாலனி குணரட்ணம் அவர்களது தலைமையிலே அந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு வடக்கு கடற்றொழில் சங்கங்களையும் ஒன்றிணைக்குமாறு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இன்று சட்டத்தரணி வருகை தந்து கலந்துரையாடி எங்களையும் இணைப்பதற்கான ஆவணங்களை இன்று மாலை நாங்கள் அவரிடம் கையளிக்கவும் இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
அதேபோன்று இந்தப் பேர்ள் கப்பலின் பாதிப்பும் இந்தப் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. கடந்த காலங்களில் ஊடகங்கள் ஊடாக இது வெளிப்படுத்தப்பட்டது. கடல் ஆமைகள் திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியது. அதே போல் மீன் உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதையும் நாங்கள் அவருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். அவர் இந்த பாதிப்பு இலங்கை கடற்றொழில் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
அந்த வழக்கை சட்டத்தரணியோடு இணைந்து அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கம் எங்களையும் இணைத்துள்ளது. இன்றைய கூட்டத்திலே அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தோடு கடற்றொழில் சமாசங்களும் இணைந்து செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையிலே இன்றைய கலந்துரையாடலில், தற்போது பாதிப்பாக இருக்கின்ற தொழில் என்ற அடிப்படையிலே உள்ளூர் இழுவை மடி தொழிலை முற்றாக தடுப்பதற்கு நீதிமன்றம் நாடி அதன் ஊடாக தீர்வை பெறுவதற்கும், இந்திய நிலுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள்ளே வருவதை நிறுத்துவது தொடர்பாகவும், யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன கடல் அட்டை பண்ணையால் கடற்தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பும் அது தொடர்பாக இலங்கையினுடைய கடை தொழில் அமைச்சர் செவி சாய்க்காது தொடர்ந்து சீன கடல் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்குவேன் என கூறுவதற்கு எதிராக போராட்டம் செய்வது பற்றியும் நாங்கள் கலந்தாலோசித்துள்ளோம்.
சுருக்குவலை தொழில் அதேபோல சட்டத்திற்கு முரணாக 21 முழத்திற்கு மேற்பட்ட கம்பிப்பாடு கிளிநொச்சி மாவட்டத்திலேயே பாயப்பட்டிருப்பதாலும் அந்தக் கிளிநொச்சி மாவட்ட கடைத்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கின்றது. இதுகளை கட்டுப்படுத்தும் முகமாகவும், இனி நாங்கள் ஒன்றிணைந்து இந்த கடற் தொழிலாளர்கள் உடைய பிரச்சினையை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவது, அதேபோல சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இன்று பல சட்டங்கள் நடைமுறையில் இல்லாது இருக்கின்றது. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் கொழும்பிலிருந்து வந்திருக்கின்ற சட்டத்தரணியிடம் எங்களது கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம்.
அவர் முதலாவதாக இந்த பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கை தான் முன்கொண்டு செல்வதென்றும் அதற்கு வடக்கு கடத் தொழில் சமூகங்கள் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் இதனைத் தான் வரவேற்பதாகவும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வதற்கு எங்களையும் இணைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இந்தக் கூட்டங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் என்பதையும் இந்த அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தோடு இணைந்து எங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எட்டப்பட்டது என்றார்.