அம்பாறை ஆலையடிவேம்பில் நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யுமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யுமாறு  கோரிக்கையை முன்வைத்து  திங்கட்கிழமை (10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.


குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் அம்பாறை, உகன, தமனை பிரதேச விவசாய அமைப்புகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில் இன்று காலை ஒன்று திரண்டனர்.

இதில் ஒரு கிலோ நெல்லை  100 ரூபாவாகவும் காய்ந்த ஈரப்பதன் அற்ற நெல்லை கிலோ 120 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் களஞ்சிய சாலையை திறந்து நெல்லினை முழுமையாக கொள்வனவு செய்,

கடந்த கால அரச கொள்கையினால் உரங்கள் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்ததுடன் உற்பத்தி விலையை விட கொள்வனவு விலை குறைவாக காணப்படுவதால் நாம் நஷ்டம் அடைந்துள்ளோம்.

அரசினால் அறிவிக்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் தமக்கு வழங்கப்படுவதில்லை என்பதுடன் இதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் ஊடாக அரசு மேற்கொள்ளவேண்டும்.

நெல்லின் உற்பத்தி ஒரு ஏக்கருக்கு 160000 செலவாகின்ற நிலையில் தற்போதைய உஷணமான காலநிலையில் நெல் போதிய விளைச்சல் இன்றி 20 தொடக்கம் 25 மூடைகள் கிடைப்பதால் தாம் நஷ்டத்தை சந்திப்பதுடன் தற்போது ஒரு மூடை நெல் 3500 ரூபா தொடக்கம் 4500 ரூபா வரை கொள்வனவு செய்வதால் 6000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. என பதாதைகள் ஏந்தியவாறு மணிக் கூட்டு கோபிரத்தில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக சாகாம வீதி ஊடாக ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் ஆர்பாட்டகாரர்கள் கோரிக்கையடங்கி மகஜரை கையளித்ததை தொடர்ந்து அவர் இது தொடர்பில் தான் உரிய அமைச்சரிடம் ஜனாதிபதியிடம் ஆலோசித்து தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்தார்.

அதேவேளை பிரதேச உதவி பிரதேச செயலாளரிடமும் மகஜரினை கையளித்ததுடன் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews