மட்டக்களப்பில் 72 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதிகள் கிழக்கு ஆளுநர் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் வுஊயுஆP-PசுனுP 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகளை இன்று (12) புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவணைக்கு திறந்து வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வழிகாட்டலின் கீழ் பொது தீர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் வுஊயுஆP-PசுனுP நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 72 மில்லியன் ரூபா செலவில்  மட்டக்களப்பு கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகள் புனரமைக்கப்பட்டது .

இதனை மக்கள் பாவனைக்கா திறந்துரவக்கும் நிகழ்வு கொக்குலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி செயலாளர் யு.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  விசேட அதிதியாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு வீதியை மக்கள் பாவனைக்காக ஆளுநர் சம்பிராய பூர்வமாக திறந்துவைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews