கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி சார் கூட்டம் நேற்றைய தினம் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், கிளிநொச்சி கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கமக்கார அமைப்புகள் தமது நெல்லுக்கான உரிய விலை கிடைக்கப்படாத காரணத்தினால் தாம் பல்வேறு வகையிலும் பாவிக்கப்பட்டதாகவும் இதற்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அடுத்து கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தெரிவிக்கையில் ஒரு கிலோ நெல்லுக்கான விலை 95 ரூபாய் எனவும், ஒரு விவசாயிடமிருந்து 5000 கிலோ நெல்லினை நாளை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.