நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி மீள அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டன.
சட்ட மா அதிபர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த முறைப்பாடு தொடர்பில் குரல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதனை இது தொடர்பான திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தார்.