மட்டக்களப்பில் இஸ்லாம் மதம் மாறிய தாய் தந்தையுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்ற 11 சிறுவனை அவனது அப்பம்மாவுடன் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பிப்பு

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளுடன் இஸ்லாம் மதம் மாறிய நிலையில் தாய் தந்தையுடன் மதம் மாறி சென்று வாழமுடியாது என நீதவானிடம் கூறிய 11 வயது சிறுவன் ஒருவரை அவனது அப்பம்மாவுடன்  செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (18)  அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இது பற்றி தெரியவருவதாவது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியராக கடமையாற்றும் பெண் ஒருவர் அவரது கணவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்த 4 பேர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களது 11 வயதுடைய சிறுவனான மூத்த மகன் தாய் தந்தையிடமிருந்து சென்று அவனது அப்பம்மாவுடன் நீண்ட காலமாக வாழ்ந்து வந்துள்ளான்.

இந்த நிலையில் மதமாறிய தாய் தந்தையினர் குறித்த சிறுவனை அவனது அப்பம்மாவீட்டில் இருந்து கூட்டிச் சென்று அவன் கற்றுவந்த பாடசாலையில் இருந்து விலக்கி கொண்டு முஸ்லீம் பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்கபதற்கு சோர்க்கப்பட்மு அவனை அவனை இஸ்லாம் மதத்தற்கு மாற்ற முற்பட்டுள்ளனர்.

இந்த மதமாற்ற நடவடிக்கையையடுத்து குறித்த சிறுவனுக்கு அந்த சூழல் பிடிக்காத நிலையில் அவன் அங்கிருந்து அங்கிருந்து வெளியேறி அப்பம்மா வீட்டிற்கு சென்று பின்னர் தன்னை வலுகட்டாயமாக தாய் தந்தை மதமாற்ற முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையின் பின்னர் குறித்த தாய் தந்தையாருக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை (18) மட்டு நீதவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தொடுத்ததுடன் சிறுவனையும் அவனது தாயாரையும் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் வழக்கை விசாரணைக்காக எடுத்துக் கொண்ட போது சிறுவன்  நீதவானிடம் தான் தாய் தந்தையுடன் செல்வதற்கு விருப்பம் இல்லை எனவும் தனது அப்பம்மாவுடன் செல்ல அனுமதிகோரியதையடுத்து வழக்கை தீர ஆராய்ந்த பின்னர் நீதவான் சிறுவனை அவனது அப்பம்மாவுடன் சென்று வாழ அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews