13 இறுதித் தீர்வல்ல -ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய நிலமையில் – இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

அதுதான் இறுதித் தீர்வா என ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

’13ஆம் திருத்தம்தான் இறுதித் தீர்வு என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லை. தற்போதைய நிலைமையில், இந்த ஆட்சியில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழ்நிலை இல்லை. எனவே, இருக்கின்ற அரசமைப்பைக்கொண்டு, இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே எமது நோக்கம். தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு நான் சம்மதம். ஆனால், இது தொடர்பில் நாடாளுமன்றமே இறுதி முடிவு எடுக்கும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews