நாடு பாரிய பொருளாதார பாரிய நெருக்கடிக்குள் தள்ளபடும் பொழுது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே – பாலித புகழாரம்

நாடு பாரிய பொருளாதார பாரிய நெருக்கடிக்குள் தள்ளபடும் பொழுது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே அந்த தருணத்தில் எந்த ஒரு எதிர்கட்சி தலைவரும் முன்வரவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலி ரங்கே பண்டார தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை வாழ் மக்களை நான் நம்புகின்றேன்.இநநேரத்தில் எனது கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிகளையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றன்.முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனும் நானும் அவரும் ஒன்றாக பாராளுமன்றம் சென்றோம்.அவர் ஒரு போராளி ஆயுதமின்றி போராட்டம் செய்தவர் .அவர் வடக்கு பிரச்சினையை மட்டுமல்லாது முழு இலங்கையிலும் ஏற்பட்டும் பிரச்சினையை பற்றி பேசிய ஒருவர்.
1948 இந்த ஐக்கிய தேசிய அனைத்து இனத்தவர்களையும் இணைத்தே உருவாக்கப்பட்டது.வேறுபாடு அற்ற ஒரு கட்சியே எமது கட்சி .டி.எஸ் சேனநாயக்கா இந்த கட்சியை இலங்கையருக்கான கட்சியாகவே உருவாக்கினார்.ஆகையால் இப்பொழுதும் பலமாக எமது கட்சி உள்ளது.
பின்னர் பண்டார நாயக்காவினால் உருவாகாகப்பட்ட கட்சி பௌத்தசிங்கள பேரினாவாதத்தை உருவாக்கியது.பின்னர் முஸ்லிம் தமிழ் கட்சிகளும் பல உருவாக்கினர்.
முற்பது வருடங்களாக யுத்தம் ஏற்பட்டது.ஜேவிபியும் யுத்தத்தில் ஈடுபட்டனர்.இதன் விளைவு நாம் எமது நாட்டின் எதிர்காலம் படு பாதாளத்திற்குள் போனது.பொதுமக்கள் அல்லல் பட்டார்கள் அரசியல் வாதிகள் குதூகலமாய் இருந்தார்கள்.எப்பொழுதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியற்று போகிறதோ அப்பொழுதெல்லாம் நாடு கீழவிழுந்தது .நாடு கீழ் விழுந்த போதெல்லாம் அதனை தூக்கி விட்டது ஐக்கிய தேசிய கட்சியே.
சிறிமாவோ பண்டாரநாயக்க மகிந்த கோத்தா என நாடுகள் பாதாளத்தினுள் தள்ளபட்ட பொழுதெல்லாம்  அதனை மீட்டெடுத்தது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தளள்பட்ட பொழுது எதிர்கட்சியை பொறுப்பேற்கசொல்லும் பொழுது டலஸ் அழகபெரும , அனுரகுமார ,சஜித் என அனைவரும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பித்தார்கள்.ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரே காணப்பட்டார்.அவரே நாட்டை மீட்டெடுத்தார்.
2019 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்தில் சஜித் முறையான முடிவை எடுத்திருந்தால் நாடு பொருளாதார நெருக்கடிக்கு சென்றிருக்காது.சஜித் தனது தகப்பன் பிரேமதாசவின் உரோமத்திற்கு கூட பொருந்தாததவர்.
தற்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபயின் இலக்கு 2048 இற்கு முன்னர் நாட்டினை தன்னிறைவான நாடாக மாற்றுவது .ஏன் 2048 என கேட்கலாம் இவர் ஒரு இலக்கை கொடுத்திருக்கிறார் தன்னிறைவு பெற்ற நாடாக அதற்கு முன் மாறும் என்று அதனால் தான் மக்கள் சரியான தீர்மானம் எடுக்கவேண்டும் என கோருகின்றோம்.
1946 முல் 52 வரை தன்னிறைவாக இருந்த நாடு 52 இன் இனவாத அரசியல் நாட்டை பின்னோக்கி சென்றது.மீண்டும் அந்நிலை பிறந்துள்ளது.வடக்கு கிழக்கு முழுவதும் மக்கள் சேவைக்காக பலர் உருவாக்கப்பட்டுள்ளனர்.ஒரு நாட்டு மக்களாய் செயற்படுவோம்.
வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் எமது அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் மூலம் வளர்தெடுக்க தீர்மானித்துள்ளோம்.எமதுநாடு ஒரு நல்நிலைக்கு வரவேண்டும்.அதுவே எமது கட்சியின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews