வடக்கு கிழக்கு – மலையக உறவின் அவசியம்…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

மலையகத்திற்கும் இ வடக்குக் கிழக்கிற்குமான உறவு மரபுரீதியானது. அதில் பல விமர்சனங்கள் இருந்தன. போதாமைகள் இருந்தன. ஆனாலும் உறவு தொடர்ந்தது. தொடர வேண்டும் என்பது கள நிர்ப்பந்தம். மலையகம் 200 நினைவு கூரும் போது உறவை மீள்பரிசீலனை செய்வதும் புதுப்பிப்பதும் அவசியமாகின்றது. இன்றும் கூட களயதார்த்தம் உறவை பலப்படுத்த வேண்டும் என்பதையே வற்புறுத்துகின்றது.
இந்த கள யதார்த்த நிர்ப்பந்தங்களுக்கு பல காரணங்கள் இருந்தன. அதில் முதலாவது இரண்டு சமூகங்களுமே ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அதுவும் ஒரு நாட்டுக்குள் வாழும் இரண்டு ஒடுக்கப்படும் இனங்கள். இவ்வாறான தேசிய இனங்கள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் ஒருங்கிணைவை ஏற்படுத்தாமல் தமது விடுதலையை நோக்கி முன்னேற முடியாது.
தேசிய இன ஒடுக்கு  முறை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவை தான். அளவில் மட்டும் சில வேறுபாடுகள் இருக்கலாம். தேசிய இனமாக இருப்பதை அழிப்பதே அந்த ஒடுக்கு முறை அதாவது தேசிய இனத்தை தாங்;குகின்ற தூண்களான நிலம்இ மொழி இ பொருளாதாரம் இ கலாச்சாரம் என்பதை அழிப்பதே அந்த ஒடுக்கு முறை. உயிர் அழிப்பு அதன் உச்ச வடிவமாகும். இந்த ஒடுக்கு முறையிலிருந்து  விடுதலை பெறுவதற்கான அரசியல் தான் தேசிய இன அரசியல். இது ஒரு வகையில் இறைமையைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் தான். இறைமை அரசியலுக்கான தீர்வு ஏதோ ஒரு வகையில் இறைமையைப் பெற்றுக் கொள்வது தான்.
ஒரு நாட்டுடிக்குள் தீர்வை வழங்குவது என்றால் நியாயமான வகையில் தேசிய இனங்கள் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். தனியான நலன்களைத் தனியாகவும் கூட்டான நலன்களை கூட்டாக பேண வேண்டிய பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அடையாள அரசியல் என்பது வேறு. அது பாராபட்சங்களுக்கு எதிரான அரசியல். அதற்கு அதிகாரப்பகர்வு அவசியமில்லை. பாராபட்சங்களை இல்லாமல் செய்வதே போதுமானது. தேசிய இன ஒடுக்குமுறைக்கான தீர்வை அடையாள அரசியலினால் பெற்றுக் கொள்ள மடியாது
மலையக அரசியல் 1939 ம் ஆண்டு இலங்கை – இந்திய காங்கிரஸ் தோற்றத்துடன் இன அரசியல் என்ற தளத்திற்கு வந்தது. அந்த இனத்திலுள்ள சகல தரப்புகளும் அந்த இன அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டனர். இந்தியத்தமிழர் என்பதே அந்த இன அரசியலின் அடையாளம். 1970 களில் சாந்திகுமார் தலைமையிலான மலையக மக்கள் இயக்கத்தின் தோற்றத்துடனும் இ 1980 களில் மலையக மக்கள் முன்னணியின் தோற்றத்துடனும் மலையக அரசியல் தேசிய இன அரசியல் என்ற தளத்திற்கு வந்தது மலையக மக்கள் முன்னணியின் தனிஅதிகார அலகுக்கோரிக்கை இ தமிழ் முற்போக்கு முன்னணியின் சமூக ரீதியான அதிகாரப்பகிர்வுக் கோரிக்கை மலையக சமூக ஆய்வு மையத்தின் நில அடிப்படையிலானதும்இ சமூக அடிப்படையிலானதுமான அதிகாரப்பகிர்வுக் கோரிக்கை என்பனவெல்லாம் தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுச்சியடைந்தனவே.
தேசிய இன அரசியல் என்ற தளத்திற்கு வந்த பின்னர் இதே போல ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசிய கிளைகளுடன் ஒருங்கிணைந்த அரசியலுக்கு வரும் போதே தேசிய இன அரசியலை உலக மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். தேசிய இனப்பிரச்சினை என்பதே சாராம்சத்தில் சர்வதேச பிரச்சினை தான் சர்வதேசத்தலையீடு இல்லாமல் தேசிய இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு சாத்தியமில்லை. இதைத்தான் பேராசிரியர் சிவத்தம்பி “ தேசிய அரசியலினால் தான் ஒரு தேசிய போராட்டம் உருவாகும். தேசிய அரசியலினால் ஒரு தேசிய போராட்டம் வளர்ச்சி அடையும் ஆனால் சர்வதேச அரசியலே ஒரு தேசிய போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டார்.
எனவே வடக்கு – கிழக்கு விவகாரத்தையும் மலையக விவகாரத்தையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதோ ஒரு வகையில் இரண்டிற்குமிடையே ஒருங்கிணைந்த அரசியல் அவசியமாகும். இந்த ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதற்கு பொது விவகாரங்களையும் துணை நிலை விவகாரங்களை அடையாளம் கண்டு செயற்பட வேண்டும.; உதாரணமாக மொழி அழிப்பு என்பது மலையக மக்களுக்கும் வடக்கு – கிழக்கு மக்களுக்கும் பொதுவான விவகாரமாகும் இதற்கு ஒருங்கிணைந்து போராடலாம். அதே வேளை அரசியல் திர்வு போன்ற விவகாரங்களில் ஒரு தரப்பிற்கு மற்றைய தரப்பு துணையாக நிற்கலாம். மனோகணேசன் கூறியது போல தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் அரங்கம் ஒன்றை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம்.
இரண்டாவது இரண்டு தேசிய இனங்களும் இலங்கை தீவைப்பொறுத்தவரை எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களாகும். இவ்வாறான இனங்கள் தமது அக ஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னே செல்ல முடியாது புற ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மலையக மக்களைப் பொறுத்தவரை வடக்கு – கிழக்கு தமிழர்கள் சிறந்த சேமிப்புச்சக்திகள.; அதே போல வடக்கு – கிழக்கு மக்களுக்கு மலையக தமிழர்கள் சிறந்த சேமிப்புசக்திகள் . அதே போல இரு பகுதியினருக்கும் உலகத்தமிழர்கள் நல்ல சேமிப்புச் சக்திகளாக உள்ளனர். எனவே ஒருவருக்கு  ஒருவர் உதவக்கூடிய சேமிப்புச் சக்திகள் என்ற வகையில் இரு தரப்புக்குமிடையிலான உறவு அவசியமாக உள்ளது.
மூன்றாவது ஒரே இனம் இ ஒரே மொழி என்ற தொப்புள்கொடி உறவும் இரண்டு தரப்புகளுக்குமிடையிலான உறவை வேண்டி நிற்கின்றது ஈழத்து தமிழ் இலக்கியத்தை வடக்கு – கிழக்கு இலக்கியமும்இ மலையக இலக்கியமும்  வளப்படுத்தியிருக்கின்றது. வடக்கு –கிழக்கைச் சேர்ந்தவர்கள் மலையக இலக்கியத்தை  வளப்படுத்தியிருக்கின்றாhர்கள். எழுத்தாளர் ஞானசேகரன் இதற்கு நல்ல உதாரணம். அதே போல வெற்றிச்செல்வி போன்ற வன்னியில் வாழ்ந்த மலையக வம்சாவழியினர் வடக்கு – கிழக்கு இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளனர்
நான்காவது இன்று கணிசமான மலையக வம்சாவழியினர் வடக்கு – கிழக்கில்  வாழ்கின்றனர். அதே அளவு இல்லாவிட்டாலும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த கணிசமானோர் மலையகத்தில் வாழ்கின்றனர். இந்த வாழ்நிலைகளும் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் உறவின் தேவையை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளது.
மேற்கூறியவாறு உறவுகளைக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருந்தாலும் அதைக் கட்டியெழுப்புவதில் பல சவால்களும் உள்ளன என்பதை நிராகரிக்க முடியாது. அதில் முதலாவது இனத்தால்இ மொழியால் இரு சமூகங்களும் ஒன்றுபட்டிருந்தாலும் அரசியல் அடையாளத்தால் வேறுபட்டிருக்கின்றனர். வடக்கு – கிழக்கு அரசியல் சுயநிர்ணய சமஸ்டிக்கு அப்பால் செல்லலாம் ஆனால் மலையக அரசியல் அதிகாரப் பகிர்வுக்கு அப்பால் செல்ல முடியாது தவிர வடக்கு – கிழக்கிற்கான அரசியல் தீர்விற்குள் மலையக மக்களை உள்ளடக்க முடியாது. அவர்களுக்கென தனியான அரசியல் தீர்வே தேவையாக உள்ளது. தொண்டமான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டத்தலைமையிலிருந்து விலகியமைக்கும்இ ஈரோஸ் இயக்கத்தின் மலையகத்தையும் இணைத்த ஈழம் என்பது தோல்வியடைந்தமைக்கும் இதுவே காரணமாகும்.
இரண்டாவது அரசியல் வளர்ச்சியிலும் இரண்டு சமூகங்களுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன வடக்கு- கிழக்கில் எதிர்ப்பு அரசியல் என்பது நிலையானதாகி உள்ளது. தமிழரசுக்கட்சியின் 30 வருட அகிம்சைப் போராட்டமும் விடுதலை இயக்கங்களின் 30 வருட ஆயுத பேராட்டமும் எதிர்ப்பு அரசியலை நிலையானதாக்கிவிட்டது. அரச ஆதரவு அரசியல் என்பது இங்கு பெரும்பாலான மக்களினால் துரோக அரசியலாகவே பார்க்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலை கூட இவ் அரசியலை பெரியளவிற்கு அசைக்கவில்லை. மாறாக மலையக அரசியல் என்பது தற்போதும் அரச ஆதரவு அரசியலாகவே உள்ளது. எதிர்ப்பு அரசியலை நடாத்துவதற்கு அங்கு அரசியல் சக்திகள் இன்னமும் தயாராகவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று நிர்ப்பந்த ரீதியாக எதிர்க்கட்சி அரசியலுக்குள் நின்றாலும் எதிர்ப்பு அரசியல் களத்தை நோக்கி இன்னமும் வளரவில்லை. தொண்டமான் ஆளும் கட்சி அரசியலுக்குள் நின்று கொண்டு எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுத்தார். இவ்வாற்றல் தற்போதுள்;ள தலைமைகளுக்கு இருக்கின்றது எனக் கூற முடியாது. முன்பு பெருந்தோட்டத்துறை தொழிற்சங்க அரசியலுக்கூடாக ஒரு எதிர்ப்பு அரசியலுக்கான தளத்தை வளங்கியிருந்தது. இன்று அதுவும் பலவீனமாகியுள்ளது.
எதிர்ப்பு அரசியல் வளராததினால் ஏற்பட்ட விளைவு மலையகப்பிரச்சினை உரிய வகையில் பேசு பொருளாகாததுதான். இலங்கை மட்டத்தில் கூட அது பேசுபொருளாகவில்லை.  இதனால்  கொழும்பு மட்டத்திற்கு கூட மலையக அரசியல் பெரிதாக வரவில்லை. சென்னைக்கும் பெரிதாக வரவில்லை. இந்நிலையில் டெல்லிக்கும் நியூயோர்க்குக்கும் செல்லும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும். உண்மையில் மலையகத்தில் எதிர்ப்பு அரசியல் வளர்ந்திருந்தால் டெல்லியின் கதவுகளை மட்டுமல்ல லண்டனின் கதவுகளையும்இ  நியூயோர்க்கின் கதவுகளையும் கூட வலுவாக தட்டியிருக்க முடியும்.
மலையக மக்களைப் பொறுத்தவரை டெல்லியும் லண்டனும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளன. பிரஜாவுரிமைச்சட்டங்கள் மலையகத்தில் முதலாவது இன அழிப்பு. சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம் இரண்டாவது இனஅழிப்பு. இந்த இரண்டு இன அழிப்புக்களுக்கும் இந்தியா பொறுப்புக்கூற வேண்டும். மலையக மக்களை குடியேற்றியது பிரித்தானியா ஆனால் மலையக மக்களின் விவகாரத்தில் பாராமுகமாக உள்ளது. இதற்கு பிரித்தானியா பொறுப்புக்கூற வேண்டும். தவிர மலையக மக்களின் அவலங்களுக்கு காரணமாக இருந்த நாடு என்ற வகையில் அதற்கான நட்டஈட்டையும் பிரித்தானியா மலையக மக்களுக்கு வழங்க வேண்டும். ஆபிரிக்க நாடுகள் இவ்வாறான நட்டஈட்டை பிரித்தானியாவிடம் கோரியுள்ளன. கறுப்பின மக்களின் அவல நிலைக்கு பிரித்தானியாவே காரணம் என்பதால் அக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு  கிழக்கு பின்பற்றுகின்ற எதிர்ப்பு அரசியலும் மலையகம் பின்பற்றுகின்ற அரச ஆதரவு அரசியலும் ஒருங்கிணைவுச்செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தடைகளை ஏற்படுத்துகின்றன.
மூன்றாவது மலையகம் சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசமாக இருக்கின்றமையாகும். வடக்கு – கிழக்கிற்கு அவ்வாறான நிலை குறைவு. மலையகத்திற்கு எப்போதும் பாதுகாப்பு நெருக்கடி உண்டு. வடக்கு – கிழக்குடனான உறவு எப்போதும் அதற்கு நெருக்கடிகளை கொண்டுவர பார்க்கும். தவிர இலங்கை அரசாங்கமோ இ இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கு – மலையகம் ஒருங்கிணைந்து செயற்படுவதை விரும்பமாட்டா. அது அவற்றினுடைய நலன்களுக்கு எதிரானது. தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா துணை நின்றது என்பதாலும்இ தமிழ் மக்களின் நிலை நின்று இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க பின்நின்றதாலும் இ வேறு நாடுகள் தலையிட்டு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இடம் கொடுக்காததினாலும் வடக்கு – கிழக்கின் மத்தியதர வர்க்கம் இன்று இந்தியாவுடன் இல்லை. தனக்கு சார்பாக வடக்கு – கிழக்கு அரசியலைத் திருப்புவதற்கு இந்தியா எடுத்த முயற்சிகள் எல்லாம் அண்மைக்காலத்தில் தோல்வியிலேயே முடிந்துள்ளன. தற்போது இலங்கையை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் போட்டி முன்னரை விட முனைப்படைந்துள்ளது. இது விடயத்தில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு பலமான குழுவினர் தேவை. வடக்கு – கிழக்கினை கருவியாக பயன்படுத்துவது கடினமாக இருப்பதால் மலையகத்தின் மத்தியதரவர்க்கம் நோக்கி தற்போது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது. வடக்கு கிழக்கு – மலையகம் ஒருங்கிணைந்தால் தனது கருவி பலவீனப்படும் என்பதால் இந்தியாவும் உறவு வளர்ப்பதை விரும்பவில்லை.
நான்காவது வடக்கு – கிழக்கில் வாழும் மலையக வம்சாவழியினருக்கு போதிய அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்ற அதிர்ப்தியும் மலையகத்தின் நடுத்தர வர்க்கத்திடம் உள்ளது . இதுவும் உறவினை கட்டியெழுப்புவதில் தடங்கல்களை ஏற்படுத்துகின்றது.
அடுத்த வாரம் போதாமைகளை சீர்செய்ய என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்

Recommended For You

About the Author: Editor Elukainews