அடுத்த வருட பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
யட்டிந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு அடுத்த வருடமும் சவாலான பாதீட்டை முன்வைக்க வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருட பாதீட்டுக்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவு தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
கடந்த 22ம் திகதி வரை இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி முதல் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் மற்றும் முன்மொழிவுகள் என்பன திறைசேரி செயலாளரின் தலைமையில் மீளாய்வுசெய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.