![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/08/VideoCapture_20230831-141312-818x480.jpg)
யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (30) நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/08/VideoCapture_20230831-141312.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/08/mq1-1.webp)
இந்நிலையில் ஆலய குருக்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.