பிள்ளையான் கடத்தல் கொலைகள் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்; கொலைகள் கப்பமூலம் பெற்ற கோடிக்கணக்காக சொத்துக்கள் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே அவரால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் அதேவேளை சர்வதேச விசாரணை வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில்நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 17ம் திகதி எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் திருமலை கப்பல் துறையில் திலீபனின் ஊர்தியுடன் சென்ற போது அந்தபகுதி பேரினவாத செயற்பாட்டளர்களால் மிகவும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டடு வாகனங்கள் ஊர்தி அடித்து நெருக்கப்பட்டு மிகமோசமான சம்பத்தை அரங்கேற்றியுள்ளனர்

அது தொடர்பாக தமிழர் தாயகம் வாழுகின்ற மக்களும் முக்கியஸ்தர்களும் சர்வதேசம் எங்கும் வாழுகின்ற தொப்பிள் கொடி உறவுகளும் புலம்பெயர் தமிழ் மக்கள் கண்டனங்களை தெரிவிக்கின்ற இந்த வேளையிலே  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்த பவனியை கொண்டு செவல்வதற்கு பொலிசாரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் நினைவேந்தல் செய்ய சட்ட ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும் என  ஒரு பிழையான கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் திகதி பொத்துவில் இருந்து தியாகதீபம் திலீபனின்  ஊர்தி பவனி ஆரம்பித்து 16 ம் திகதி மட்டக்களப்பில் மக்களின் அஞ்சலியின் பின்னர் 17 ம் திகதி திருகோணமலைக்கு பவணி கொண்டு சென்றோம் அங்கு தாக்கப்பட்டனர் அந்த இடத்திலே இருந்த பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் போது அதனை தடுக்காமல் மாறாக அடிவாங்கியவரை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்

தமிழனாக இருந்து இந்த கருத்தை வெளியிட்டிருப்பீர்களானால் யதார்த்மான கருத்தை வெளியிட்டிருப்பார் மாறாக தொடர்ச்சியாக பதவியை தக்கவைப்பதற்காக உங்கள் எஜமானுக்கு விசுவாசமாக கருத்தை வெளியிட்டுள்ளீர்கள் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை மீறி பல்வேறு விதமான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை விவகாரம் அந்த பகுதியிலே சட்டவிரோதமாக குடியேறி காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தால் வெளியேறுமாறு கட்டளை பிறப்பித்து ஒரு வருடம் கடந்த நிலையில் அதனை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் அந்த மேச்சல் தரையில் உழுது கொண்டு பயிர் செய்து கொண்டு எமது பண்ணையாளர்களை அடித்து துரத்தியுள்ளனா.;

அதேவேளை திருகோணமலையில் பல விகாரைகள் சட்டவிரோதமாக கட்டுப்படுகின்றன அதனை தடை செய்யாமல் அனுமதிவழங்கியதுடன் மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதுடன் எத்தனையே வளங்கல் மண்பாபிகளால் சுரண்டப்படுகின்றது இது சட்டவிரோதமாக நடக்கின்ற செயற்பாடுகள் இந்த விடையங்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் மீதும் குற்றச்சாட்டை வைப்பதுடன் தியாக தீபம் திலீபன் காந்திய தேசத்திற்கு அகிம்சையை கற்றுக் கொடுத்த மகான் அப்படிப்பட்ட மாகானுடைய அகிம்சைவழி போராட்டத்தை கொச்சைப்படுத்தியுளளார்.

எனவே ஆளுநர் நேர்மையானவர் என்றால் சட்டம் ஒழுங்கை அங்கே பார்த்திருக்க வேண்டும் இங்;கே இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது மிகவும் நகைப்பிற்குரிய விடையம்.

சனல் 4 ஆவண படம் ஈஸ்ரர் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை மிக தெளிவாக வெளியிட்டுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் இந்த மண்ணிலே செய்த அட்டூழியங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என கூறி மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் புலிகள் என்ற நாமத்தை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்த ஒரு சூத்திரதாரி பிள்ளையான் அவருடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலான மூலம் அந்த உண்மைகளை வெளிக் கொண்டதையிட்டு மக்கள் விழிப்ப டைந்துள்ளனர் எனவே இனியும் மக்கள் ஏமாறக்கூடாது.

தமிழ் மக்கள் போராடிவந்த ஆயுத போராட்த்தை கடந்த 13 வருடங்களாக இப்படிப்பட்டவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து காட்டிகொடுத்து அடித்து நெருக்கி தமிழ் மக்கள் இன்று நடக்க முடியாத நிலையில் தாய் தந்தை அற்ற அனாதைகளாக காணப்படுவதற்கு காரணமான பிள்ளையான் போன்ற நபர்கள் இன்று கையும் மெய்யமாக பிடிபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பில் செய்த அநியாயங்கள்; இவருடன் கூட்டுச்சோந்து இயங்கிய பார மில்ரரி குழுவான துணை  இராணுவகுழுக்கலால் சுட்டுக் கொல்லப்பட்ட எத்தனையே பேர் மட்டக்களப்பிலேயும் கிழக்கு மாகாணத்தில்  இருக்கின்றனர்.

பிள்ளையான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னர் அவரின் குடும்ப பின்னனி அந்த பகுதி மக்களுக்கு தெரியும் எந்தவிதமான சொத்துக்களும் இல்லை ஆனால் அண்மையிலே வீடியோ மூலம் வாழைச்சேனையில பரம்பரைக்; காணி என தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும்போது இவர் ஊழல் இலஞ்சம் கொலைகள் கொள்ளைகள் கடத்தல் காணாமல் போன செய்ததன் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றார் எனவே இவ்வாறாக சேகரித்த அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே இவரால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். நீதி பிறக்கவேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews