ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜேர்மன் அரச தலைவர் ஓலாப் ஷோல்ஸ் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு பேர்ளினில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜாதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்துள்ளனர்.
அத்துடன், ஜேர்மன் அரச தலைவர் ஓலாப் ஷோல்ஸ் தலைமையில் நேற்று இடம்பெற்ற ‘பேர்ளின் குளோபல்’ மாநாட்டுடன் இணைந்த ‘பலமுனை உலகில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்’ தொடர்பான அரச தலைவர்கள் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.