வெலிப்பன்ன பிரதேசத்தில் வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஜே. ராஜ்பாய் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் மீகம தர்கா நகரப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் காலை வேலை செய்து கொண்டிருந்தார்.
இதன் போது சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.