யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

கௌரவ நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்த தொடர்பில் பாரபட்சமற்ற உரிய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும், எச்சந்தர்ப்பத்துலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டத்தரணிகள் வலியுறுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews