யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்களால் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் அகற்றும் பணிகள் இன்று காலை 7:30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பருத்தித்திறை நகரம் மற்றும் பருத்தித்துறை கடற்கரை ஓரம் ஆகய பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் அகற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் (HCPPA – Parent Body) ஹாட்லி கல்லூரியின் 185வது ஆண்டு நிறைவு விழாவும்
“Back to Hartley” என்ற பெயரில் வருடாந்த ஒன்றுகூடலினை நடாத்த உள்ளது. “பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்பதே இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.
இரண்டு நாள் நிகழ்வாக 2023 அக்டோபர் 7 மற்றும், 8 தேதிகளில் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம்
காலை 7:00 – 8:30 வரை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சேகரிப்பும்,
காலை 9.00 மணி முதல் 9.05. வரை 186 மரங்கள் நடுகையும்,
காலை 9:15 – மாலை 5:00: Battle of Batches கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளது.
நாளைய தினம்
காலை 9:00 – 10:00 மணி: HCPPA Vs ஹார்ட்லி ஆசிரியர்கள் இடையேயான போட்டிகளும்,
காலை 10:00 மணி முதல்: அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும்
மாலை 6:00 மணி முதல்: சூரியமஹால் மண்டத்தில் பரிசளிப்பு விழா, மற்றும் இரவு உணவு, இசை நிகழ்ச்சி என்பன இடம் பெறவுள்ளன.