யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக 2023 ம் ஆண்டுக்கான பண்பாட்டு பெருவிழா மிக மிக சிறப்பாக இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலைமையிடம் பெற்ற இந்நிகழ்வில்
முதல் நிகழ்வாக ஊர்திகள் முன்னே பவனிவர காவடி , நடனம், உட்பட்ட கலைஞர்கள் அணிவகுத்துவர பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு
வடமாராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் அமைந்திருந்த முத்தையா அவரங்குவரை அழைத்துவரப்பட்டனர். அங்கு மங்கல சுடர்களினை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட செயலாளர் சிவபாதசுந்தரம், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிச் செயலாளர், கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட ஆயுள்வேத வைத்தியர் ஜோகநாதன் யாழ் மாவட்ட செயலக கலாச்சார சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர், பிரதேச சமூக சேவையாளரும் கலைஞருமான சோதிலிங்கம்,
மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், காத்தவராயன் கூத்து அணணாவியார் இராமநாதன் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம், வரவேற்புரை தலைமை உரை என்பன இடம் பெற்றதுடன் வடமராட்சி கிழக்கு பிரதேச பிரதேச கலைஞர்களின் நடனம் நாடகம் கிராமிய பாடல்கள் கவிதை பாட்டு போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வுகளில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பல்வேறு கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், என் பலரும் கலந்துகொண்டனர்.
இன்றைய அரங்கு மறைந்த கலைஞர் அண்ணாவியார் முத்தையா அவர்களுடைய ஞாபகமாக இடம் பெறறதுடன் அரங்க செயற்பாட்டு உரையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக முன்னாள் கலாசார உத்தியோகத்தரும்,
தற்போதைய பருத்தித்துறை பிரதேச செயலக கலாசா உத்தியோகத்தருமான திரு.கார்த்திகேயன் நிகழ்த்தியிருந்தார்.