இலங்கையின் சில பகுதிகளில் ஆகாயத்தில் இருந்து விழும் மர்ம பொருளால் மக்கள் குழப்பம்!

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை போன்ற வெள்ளை நூல் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நேற்றுமுன் தினம் பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் உள்ள இந்த இனந்தெரியாத வெள்ளை சிலந்தி வலை போன்ற பொருளால் பாடசாலை ஒன்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த வெள்ளைத் துண்டுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று காலை திம்புலாகல, நுவரகல, யக்வௌ, யக்குரே, மனம்பிட்டிய, சிறிபுர போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வெலிகந்த நெலும்வௌ, மதுரங்கல உள்ளிட்ட அண்டை கிராமங்களிலும் இந்த வெள்ளைப் பொருட்கள் விழுவதை மக்கள் கண்டுள்ளனர்.
காலை வேளையில் பொலன்னறுவை பிரதேசத்தில் இவை பெருமளவில் விழுவதுடன், அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் மற்றும் செடிகளில் பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
வானில் இருந்து விழும் அடையாளம் தெரியாத வெள்ளைப் பொருட்கள் சில நொடிகளில் கரைந்துவிடும் என பொலன்னறுவை உள்ளிட்ட அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews