இன்று அதிகாலை 1 மணியளவில் மொரட்டுவ லுனாவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் இருந்து 8 அடி நீளமான முதலை ஒன்றை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர்.
முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றதற்கான கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகளால் முதலை பிடிக்கப்பட்டுள்ள நிலையில், தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், பெல்லன்வில அத்திடிய வனவிலங்கு காரியாலயத்திற்கும் இது தொடர்பில் அறிவித்த போதும் இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.