காஸா – இஸ்ரேல் யுத்தம் காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் மூலம் 500 பேர் வரை கொல்லப்பட்டதோடு உலக முஸ்லீம் நாடுகளின் உணர்வு பூர்வமான பிரச்சினையாக மாறியுள்ளது. முஸ்லீம் உலகம் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது எனலாம். இஸ்ரேல் என்ன தான் சத்தியம் பண்ணி தான் தாக்கவில்லை எனக் கூறினாலும் உலக முஸ்லீம் மக்கள் இதனை நம்புவதற்கு தயாராக இல்லை.
இதன் எதிர்வினைகள் ஏராளம். முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அனேகமான ஆர்ப்பாட்டங்கள் அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலங்களுக்கு முன்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஜோர்தானில் அமெரிக்க தூதரகம் மக்களினால் எரியூட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் முஸ்லீம் நாடுகளின் தலைவர்களுடன் ஜோர்தானில் நடாத்த இருந்த கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் சவூதி உட்பட ஆறு முஸ்லீம் நாடுகளுக்கு சென்ற போதும் பயணம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. முஸ்லீம் நாடுகள் குறைந்த பட்சம் எதிர்நிலை எடுக்கக் கூடாது.
ரஸ்யா அணியுடன் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவுக்கு சார்பாக எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் வந்து எட்டு மணி நேரம் வரை இஸ்ரேல் அதிபருடன் பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனக் கூறியிருக்கின்றார். இராஜதந்திர ரீதியாக வேறு என்ன விடயங்கள் பேசினார் என்பது இன்னமும் வெளியாகவில்லை. மருத்துவமனை தாக்குதலின் பின்னர் அமெரிக்காவும் தடுமாறி போயுள்ளது. முன்னைய இறுக்கத்தை தற்போது காண முடியவில்லை. நிவாரண உதவிகளுக்கு வழி விடுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஜேர்மனியின் பிரதமரும் இஸ்ரேலுக்கு சென்றிருக்கின்றார். விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதால் தரையில் படுத்து தன்னை பாதுகாத்து கொண்ட நிகழ்வும் நடந்திருக்கின்றது. பிரித்தானிய பிரதமரும் விரைவில் இஸ்ரேல் செல்ல இருக்கின்றார்.
யப்பான், இந்தியா போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நின்றன. மருத்துவமனை தாக்குதலுக்கு பின்னர் தங்களுடைய ஆதரவு நிலையை கைவிட்டுள்ளன. இந்தியா இரு நாட்டுக் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு மருத்துவமனை தாக்குதலுக்கும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. யுத்த ஆரம்பத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த போதும் உள் நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவியதால் ஆதரவு நிலையை அடக்கி வாசிக்க முற்பட்டது. இந்திய மரபு இஸ்ரேலுக்கு ஆதரவானதல்ல. பாலஸ்தீனத்திற்கு ஆதரவானது. மோடி இதனை மாற்றம் செய்வதை இந்திய மக்கள் பெரியளவிற்கு விரும்பவில்லை.
மறுபக்கத்தில் ரஸ்ய அணி மிக இலாவகமாகவே காய்களை நகர்த்துகின்றது. இவ் யுத்தத்தில் தன்னை ஒரு ஒருகனவான் போலவே காட்ட முற்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யுத்த நிறுத்த பிரேரணையை அது கொண்டு வந்தது.

ஆனாலும் அமெரிக்கா மறுப்பானை அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தோற்கடித்தது. தற்போது ரஸ்யா மருத்துவ தாக்குதலுக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்ததோடு இராஜதந்திர நகர்வுகளிலும் ஈடுபடுகின்றது. இராஜதந்திர பயணமாக ரஸ்ய அதிபர் புட்டின் சீனாவுக்கும் சென்றிருக்கின்றார்.
ஈரான் பள்ளிவாசல்களின் உச்சியில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கறுப்புக்கொடி கட்டினால் அதன் அர்த்தம் யுத்தத்திற்கு தயாரென்பதே! ஈரான் யுத்த நிலைக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே அமெரிக்க யுத்தக் கப்பல் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை வடகொரியா யுத்தத்திற்கு செல்லக் கூடாது என்பதற்காக தென்கொரியக் கடலிலும் அமெரிக்கா யுத்தக்கப்பலை நிறுத்தியுள்ளது.
இஸ்ரேல் காஸா மீது தரைவழித் தாக்குதலை தொடரப்போகின்றேன் எனக் கூறினாலும் இது வரை அதனை ஆரம்பிக்கவில்லை. எல்லைப் பகுதியில் படைகளை மட்டும் குவித்து வருகின்றது. தரை வழிப்போருக்கான சாத்தியங்கள் குறைவு. அதற்கு பல தடைகள் இருக்கின்றன. அதில் முதலாவது தடை ஹமாஸ் கட்டமைப்பாகும்;. காஸாவில் வீடுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட வீடுகள் போல எனக் கூறலாம். வீடுகளையொட்டி பல்வேறு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. எகிப்திற்கு செல்வதற்கு பல சுரங்கப் பாதைகள் உண்டு. எகிப்து அரசாங்கத்தினால் கூட இந்தச் சுரங்கப்பாதைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சுரங்கங்களில் நவீன ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆயுத விநியோகமும் அதற்கு தேவைக்கு மேலாக தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றது. ரஸ்ய , ஈரான் என்பன வடகொரியா மூலம் இதனை விநியோகித்து வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே இஸ்ரேல் தரைவழி யுத்தத்தை ஆரம்பித்தால் கடும் தாக்குதலை எதிர் கொள்ள நேரிடும்.
இதைவிட காஸாவில் 27 லட்சம் மக்கள் குறுகிய நிலப்பரப்புக்குள் வசித்து வருகின்றன. அவர்களை தெற்கு நோக்கி நகரச் சொன்னாலும் அவை பெரியளவிற்கு இடம்பெறவில்லை. எகிப்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கும் தயார் நிலையைக் காட்டவில்லை. பாலஸ்தீன மக்களுக்குள்ள முன்னைய அனுபவமும் இடப்பெயர்வில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகால யுத்தங்களில் மக்கள் இடம்பெயர்ந்த போது அந்தப் பிரதேசங்களில் யூதக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அச்சம் இப்போதும் மக்களுக்கு இருக்கின்றது.
இரண்டாவது லெபனானில் இருந்தும் சிரியாவிலிருந்தும் பலத்த தாக்குதலை இஸ்ரேல் படைகள் எதிர்நோக்க வேண்டியிருப்பதாகும். லெபனானில் ஸ்புல்லா இயக்கமும், சிரியாவில் ஹாமாஸ் இயக்கமும் காலூன்றி இருக்கின்றது. ஈரான் இவற்றுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது. ஸ்புல்லா இயக்கத்திடம் இஸ்ரேலிடம் இல்லாத பல நவீன ஆயுதங்கள் உண்டு. லெபனான் இராணுவத்திற்குள்ளும் அதற்கு வலிமையான செல்வாக்கு உண்டு. அரசியல் ஆதரவும் அபரிதமானது. 64 வரையான ஸ்புல்லா அமைப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் லெபனான் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர் . சுனி முஸ்லீம் – ஷியா முஸ்லீம் முரண்பாடுகளும் தணிக்கப்பட்டுள்ளதால் முஸ்லீம் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவும் உண்டு.
மூன்றாவது முஸ்லீம் நாடுகளின் ஆதரவாகும். தரைவழி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் முஸ்லீம் நாடுகளும் யுத்தத்தில் இறங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். முன்னரே கூறியது போல உலக முஸ்லீம்களுக்கு இது உணர்வு பூர்வமாக பிரச்சினை. அவை யுத்தத்தில் இறங்காமல் தங்கள் நாடுகளில் உள்ள மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அவ்வாறு முஸ்லீம் நாடுகள் யுத்தத்திற்கு இறங்குமாக இருந்தால் அது பிராந்திய போராகவே வளர்ச்சியடையும்.
நான்காவது வடகொரியா, ஈரான் போன்றவை களத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போதும் இவை களத்தில் தான் உள்ளன. ஆனால் நேரடியாக இல்லை. எதிர்காலத்தில் அவை நேரடியாகவே இறங்கக் கூடும். ஈரான் மத்திய கிழக்கிலும் வடகொரியா கொரிய தீபகற்பத்திலும் போர் முனையை திறக்கக் கூடும் தவிர ரஸ்ய சார்பு ஆபிரிக்க நாடுகளும் யுத்தத்தில் தம் பங்கிற்கு இறங்கலாம்.
ஐந்தாவதாக இறுதி நிலையில் ரஸ்யா, சீனா என்பனவும் யுத்தத்தில் இறங்கலாம். தற்போது கூட பாலஸ்தீனம் சார்பான அணியை வழிநடாத்துவது இவ் வல்லரசுகள் தான். இவையும் இறங்குமாக இருந்தால் யுத்தம் 3ம் உலக யுத்தமாகவே பரிணாம வளர்ச்சி பெறும். இங்கே பல நாடுகள் அணு ஆயுத்தங்களையும் வைத்திருப்பதால் யுத்தத்தின் வளர்ச்சி நிலை அணுஆயுத்தப் போரை நோக்கியும் தள்ளப்படலாம்.
எனவே தரைவழியுத்தத்தின் வளர்ச்சி 3ம் யுத்தத்தை நோக்கிய அபாயங்களைக் கொண்டிருப்பதால் வல்லரசுகள் இவற்றை தவிர்க்கவே பார்க்கும். இதனால் தரைவழி யுத்தத்திற்கு சாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம். அதே வேளை இவ் யுத்தத்தை நீடிக்கவும் முடியாது. நீடிக்க விட்டால் தரைவழி யுத்தம் தவிர்க்கமுடியாததாகி விடும். எனவே விவகாரம் போர் நிறுத்தம் ஒன்றை நோக்கிச் செல்வதற்கே வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.
இந்த விவகாரத்திற்குள் பாலஸ்தீனத்தின் தேசிய இனப்பிரச்சினையுள்ளது. வளைகுடா நாடுகள் என்கின்ற பிராந்தியப்பிரச்சினையுள்ளது. அதே வேளை பூகோள மயமாதல் தொடர்பான சர்வதேச அரசியல் பிரச்சினையும் உள்ளது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று பிரச்சினைகள் இருப்பதனால் யுத்த நிறுத்தத்தை நோக்கிச் செல்வதைத் தவிர வேறு தெரிவு இருக்கப்போவதில்லை.
யுத்த நிறுத்தம் என்ற உரையாடல் வருகின்ற போது இரு நாடுகள் என்ற கோட்பாடு மேலே வரும். இதனைக் கவனத்தில் எடுக்காமல் இஸ்ரேலினால் தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது. எற்கனவே அதற்கான குரல்கள் பலமாக எழுச்சியடையத் தொடங்கியுள்ளன. துருக்கி , இந்தியா போன்றவை இதனை வலுவாக முன்வைத்துள்ளன. துருக்கி பாலஸ்தீன மக்களுக்குரிய நாட்டை வழங்கினால் யுத்தத்திற்கு ஏன அவர்கள் செல்லப் போகின்றனர்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவிற்கு இது நெருக்கடியான நிலை. பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்காமல் தமது நிகழ்ச்சி நிரலை மத்திய கிழக்கில் அரங்கேற்றுவது அதற்குக் கடினம். நெருக்கடியின் தொடர்நிலை முஸ்லீம் நாடுகளை ரஸ்ய அணியின் பக்கம் தள்ளுவதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கும். ஏற்கனவே பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி , அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி , சீனாவின் அசுர மேலாதிக்கம் போன்றன உலக அரசியலில் அமெரிக்காவின் மேல் நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. உலகத்தை தமக்கு சார்பாக ஒழுங்கமைப்பதற்காக அமெரிக்கா உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபையும் தற்போது பலவீனமாகியுள்ளது. உலகின் சிறிய பிரச்சினைகளைக் கூட அதனால் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ஆதிக்கத்திற்கென உருவாக்கிய உலக வங்கி , சர்வதேச நாணய நிதியம் போன்றவையும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற மாற்று நிதி நிறுவனங்களினால் பலவீனமடையத் தொடங்கியுள்ளன. டொலரின் செல்வாக்கு வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. சீனா , ரஸ்யா போன்ற நாடுகள் தமது சொந்த நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
எனவே உலகை ஒழுங்கமைப்பிற்கு பழைய நிறுவனங்கள் போதுமானவையல்ல. புதிய ஒழுங்கமைப்புக்களும் புதிய நிறுவனங்களும் தேவையாக உள்ளன. இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த காலம் அல்ல இப்போதுள்ள காலம.

இது புதிய காலம். புதிய வல்லரசுகள் எழுச்சிபெற்றுள்ளன. உலகை ஒழுங்கமைப்பதில் அவர்களுக்குரிய பங்கையும் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்;கனவே இந்தியா, பிரேசில் , தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் ஐ.நா.பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் தமக்கும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. உலகில் வளர்ச்சியடைந்து வரும் தேசிய இன நெருக்கடிகளை தீர்க்க வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. இந்நெருக்கடிகளைத் தீர்க்காமல் நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடியாது. இலங்கை அதற்கு நல்ல உதாரணம். போரை முடிவுக்கு கொண்டு வந்தாலும் சமாதானத்தைக் கொண்டுவர இலங்கையால் முடியவில்லை. இந்தியாவிலும் இதே நிலை தான். ஆபிரிக்க நாடுகளிலும் இந்நிலை அதிகமாக இருக்கின்றது.
எனவே தற்போது உலகிற்கு தேவையானது புதிய ஒழுங்கு. புதிய வெளிச்சம்.
இஸ்ரேல் – காஸா யுத்தம் அந்த வெளிச்சத்தின் தேவையை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது எனலாம்.