மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில், பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை குறித்தும் குறிப்பாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் கட்சி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அரசியல் நிகழ்வு போல் குறித்த தேசிய மீலாதுன் நபி விழா, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.