பொன்னம்பலத்தின் பேரனும்
ஈபிடிபி யின் நிலைப்பாட்டில் உள்ளார்.. அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு .
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு யாழ்.கட்சி அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்றது
(மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டை பொன்னம்பலத்தின் பேரனும் ஆதரக்கிறார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் யதார்த்தமான நடைமுறை சாத்தியமான விடயங்களையே முன்னகர்த்தி வருகிறது.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது இன்று நேற்று நாம் வலியுறுத்திய விடையம் அல்ல ஜிஜி பொன்னம்பலத்தின் பேரனும் அதை நிலைப்பாட்டை வலியுறுத்துவது வரவேற்கத்தக்க விடையம்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு போராட்டங்களுக்கான அழைப்பை தமிழ் கட்சிகள் சில வெளியிட்டன.
இரண்டு போராட்டங்களும் பிசுபிசுத்து போன நிலையில் இது எமது மக்களின் எதிர்காலத்தை பின்னோக்கி நகர்த்துவதாக அமைந்துவிட்டது.
போராட்டங்கள் மனித குலத்திற்கு அவசியமான நிலையில் நன்மைகளை வரவேற்று தீமைகளை எதிர்க்க போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் தேவை .
அதற்கு தமிழ் பேசும் சமூகம் விதிவிலக்கல்ல .தமிழ் மக்கள் சார்ந்து இரண்டு விடயத்தை சொல்லலாம் .கடைசியாக நடந்த கதவடைப்பு மனித சங்கிலியினை கூறலாம் .
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈபிடிபி தேசிய நீரோட்டத்தில் இணைந்தது.அதன் அடிப்படையில் போராட்டம் தேவையற்றது என்று இல்லை தேவையேற்பட்டால் போராட்டம் செய்ய தான் வேண்டும் .
கதவடையிப்பிற்கு எதிராக எமது உறுப்பினர்கள் முகநூலில் எதிர்பினை வெளியிட்டுள்ளார்கள் ஆனால் நான் எனது முகநூலில் எழுதியிருந்தால் அது 100 இருநூறு விகிதம் உண்மையானது.ஆகவே என்னுடைய முகநூலில் வரும் கருத்துகளே அதிகாரபூர்வமானது.
ஆகவே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என கூறும் தமிழ் கட்சி உண்மையான நிலைப்பாட்டை கூறினாலும் அக் கட்சியிடம் கொள்கை இல்லை)