நாட்டை வந்தடைந்த இந்திய நிதியமைச்சருக்கு அமோக வரவேற்பு!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம், நாட்டுக்கு வருகைதந்துள்ளார்.
நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
‘நாம் 200’ நிகழ்வு நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாக இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது கண்டியில் உள்ள புனித பல்லக்கு ஆலயம், அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதி, திருகோணேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயங்களுக்கும் செல்ல உள்ளார்.
அத்தோடு லங்கா ஐஓசி எண்ணெய் கொள்கலன் குதங்கள், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ்ப்பாண பொது நூலகம் ஆகியவற்றையும் பார்வையிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews