மின்தூக்கியில் சிக்கிய எம்.பி!

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ச மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் கண்டி மாவட்டச் செயலக மின்தூக்கியில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்தூக்கி திடீரென பழுதடைந்ததால், அதற்கு அவர்கள் சுமார் 25 நிமிடங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் தீவிர முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் அவர்களை வெளியே எடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews