வெளிநாடு செல்லவிருப்போருக்கு நற்செய்தி: அறிமுகமாகும் புதிய விசா முறைமை

இலங்கைஅரசாங்கத்தினால் புதியவிசா முறைமைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசாக்கள், போர்ட் சிட்டி குடியிருப்பு விசாக்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர வதிவிட விசாக்கள் போன்ற விசா முறைமைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் விசாக்களை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்குப் பதிலாக ஒரு முறை 200 டொலர்களை செலுத்துவதன் மூலம், முழுப் படிப்பையும் நிறைவு செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, டிஜிட்டல் பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டில் இருக்கும் போது மாத வருமானம் 2,000 அமெரிக்க டொலர்கள் என்பதற்கான சான்றை வழங்குவதன் மூலம் ஒரு வருடத்திற்குள் டிஜிட்டல் விசாவை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல், கோல்டன் பெரடைஸ், கொண்டோமினியம், குடியிருப்பு விருந்தினர் திட்டம் மற்றும் மை ட்ரீம் ஆகிய விசாக்களின் கீழ் வரும் விசா வகைகளுக்குப் பதிலாக இன்வெஸ்ட்மென்ட் விசா எனப்படும் ஒரு வகை விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் வெளிநாட்டு ஊழியர்களுக்காக இந்த வதிவிட வீசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews