நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்று மன்றின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது….!

நீதிமன்றதிற்க்குள்  மதுபோதையில் சென்று  நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம்  நாளை வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வடமராட்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவர் எனவும் தற்போது மாளிகாவத்தை பகுதியில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் பளை காவல் நிலையம் மற்றும் கிளிநொச்சி காவல் நிலையங்களில் கடமையாற்றியபோது பல்வேறு குற்றச் செயல்களுக்காக பல தடவைகள் இடமாற்றம் பெற்று சென்றவர் என்பதுடன் இன்றைய தினம் அவரது ஒன்றுவிட்தய சகோதரன் ஒருவனது களவு சம்மந்தமான வழக்கு ஒன்றிற்க்காக பருத்தித்துறை நீதிமன்றில் சென்றபோ இவ்வாறு மது போதையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டு நாளை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
காலை 9:00 மணியளவில் நீதிமன்றுக்குள் சென்ற குறித்த காவல்துறை உத்தியோலத்தர் நீதிமன்ற மதிய இடைவேளையின் பின் வெளியே சென்று மீள நீதிமன்றம் கூடிய போது மது அருந்தியதை மறைப்பதற்க்காக முகக்கவசம் அணிந்தும் , பவுக்கம் சப்பியவாறும் உள்ளே சென்று அமர்ந்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள் திறப்பு நீதிமன்றிற்க்குள் வீழ்ந்துள்ளது. அதனை அவதானித்த நீதிபதி குறித்த போலீஸ் உத்தியோகத்தரை நீதிமன்றிற்க்கு வெளியே அனுப்புமாறு நீதிமன்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு கட்டளையிட்டுள்ள நிலையில் நீதிமன்ற காவல்துறை உத்தியோகத்தர் அவரிடம் சென்று வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ள நிலையில் மதுபோதையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் தான் ஒரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள எனவும் தன்னால் வெளியால் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளபோது  அவர் மது போதையில் இருப்பதாக  நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றார்   நீதிமன்றம் காவல்துறை உத்தியோகத்தர்.
இந்நிலையில் குறித்த மதுபோதையில் இருந்தால் சொல்லப்படும் காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்து நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews