ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைக்கலாம் என்றும் அந்த பிரகடனத்தில், மீண்டும் கூடுவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 33 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி அரசாங்கக் கொள்கை அறிக்கையை வெளியிட அரசியலமைப்பின் கீழ் அவருக்கு அதிகாரம் உள்ளது.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் பொது நிறுவனங்கள் பற்றிய குழு மற்றும் பொதுக் கணக்குகளுக்கான குழு உள்ளிட்ட குழுக்களின் செயல்பாடும் நிறுத்தப்படும்.
அண்மையில் குற்றச்சாட்டை எதிர்கொண்ட கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவிற்கு பதிலாக புதிய தலைவரை நியமிப்பதற்கு வழிவகை செய்வதே இந்த ஒத்திவைப்பு என தெரிவிக்கப்படுகின்றது.