அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் மாகாண மட்ட எல்லே போட்டியில் சம்பியனான மாணவர் எல்லே அணிக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் சோமஸ்கந்தர் வாகீசன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வாக சம்பியனான எல்லே அணியினர் அம்பன் குடத்தனை ஊர் எல்லையிலிருந்து வாகனங்களில் பழைய மாணவர்களால் ஊர்வலமாக ஏற்றிவரப்பட்டு அம்பன் சமயத்தில் வங்கி முன்பிருந்து விருந்தினர்கள், மற்றும் எல்லே சம்பியன் அணியினர், ஆகியோருக்கு மலர் மாலை அணி்விக்கப்பட்டு பாண்ட் இசை முழங்க அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து வெற்றிபெற்ற அணியினரது படங்கள் பொறிக்கப்பட்ட பதாதை திரை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மங்கல் விளக்கேற்றப்பட்டது.
மங்கல சுடர்களினை நிகழ்வின் பிரதம விருந்தினரான வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர், இராஜகோபால் இராஜசீலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருதங்கேணி கோட்ட கல்வி பணிப்பாளர் செல்லத்துரை சிறிராமச்சந்திரன், வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கிருஸ்ணபிள்ளை பாக்கியநாதன், பாடசாலை அதிபர் சோ.வாகீசன், முன்னாள் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரும், தற்போதைய வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரி அதிபருமான வேல்விநாயகம் பரமேஸ்வரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சி.வரதகுலம், பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி ஜெயந்தன் குபிதா, உட்பட பலரும் ஏற்றியதுடன் வாழ்த்துரைகள் மற்றும் கருத்துரைகளையும் வழங்கியதுடன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் எல்லே சம்பியனான அணியினருக்கு பதக்கம் அணிவித்தும் , பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அம்பன் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் சம்பியனான மாணவர்களுக்கான விளையாட்டு சீருடையும் வழங்கிவைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.