டெங்கு நுளம்பு பெருகும் அபாயகரமான இடமாக சங்கானை செங்கற்படை பிள்ளையார் ஆலய சூழல்!

வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் சுமார் 3100 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் செங்கற்படை மஹாதேவா பிள்ளையார் ஆலயத்தின் அருகிலுள்ள காணியில் பெருமளவான இளநீர் கோம்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு டெங்கு நுளம்பு பரவும் பேரபாயம் காணப்படுகின்றது.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டதும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஏழாம் வட்டாரத்தில் காணப்படும் இக்காணியில் ஆலய பூசைகளின்போது பயன்படுத்தப்பட்ட இளநீர் கோரும்பைகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews