மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் நாடளாவிய ரீதியில், 2,256 குடும்பங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews