டான் தொலைக்காட்சி கலையகத்திற்கு வருகைதந்தார் மலையக குயில் அசானி!

புத்தாண்டை வரவேற்று டான் தொலைக்காட்சி குழுமம் இன்று இரவு யாழ் கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியின் கௌரவிப்பு நிகழ்வில் பற்கேற்க யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள, மலையக குயில் அசானி, இன்று காலை டான் தொலைக்காட்சி கலையகத்திற்கு வருகைதந்தார்.

டான் கலையகத்திற்கு வருகைதந்த அசானியை, டான் தொலைக்காட்சியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இ.செல்வச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அசானி, டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதனையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது டான் குழுமத் தலைவர் அசானிக்கு நல்ஆசிகளை வழங்கியிருந்தார்.

மலையக குயில் அசானியுடன், அசானியின் பெற்றோரும் டான் கலையகத்திற்கு வருகைதந்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews