டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை பாடசாலை வளாகங்களில் இருந்து அழிப்பதற்கான வேலைத்திட்டங்களை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்குமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கையில் நேற்று அறிவுறுத்தியுள்ளது.இந்த வருடம் டெங்கு நோயினால் 11 மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 88,906 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 39,000க்கும் அதிகமாகும். இதேவேளை, மத்திய மாகாணத்தில் 11,223 நோயாளர்களும் வட மாகாணத்தில் 7,598 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 7,067 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து 2023ஆம் ஆண்டில் 6,890 நோயாளிகள் சுகாதார அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.2024 ஆம் ஆண்டிற்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அடுத்த மாத தொடக்கத்தில் சுமார் 2,000 PHIக்கள் நாடு முழுவதும் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான சரியான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து பாடசாலை சமூகத்திற்கு போதிக்க பணியமர்த்தப்படுவார்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு PHI கள் பாடசாலைகளுக்குச் செல்வார்கள், ”என வைத்தியர் எஸ்.எம்.ஏ. பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.குருநாகலில் நேற்று நடைபெற்ற குருநாகல் மாவட்ட PHI களின் ஊடான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Previous Article
தவிக்கப் போகும் மாணவர்கள்-ஆசிரியர் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு
Next Article
இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கை