ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு,
அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.