தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் காலத்தில் நாங்கள் விடுதலைபெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தலைவர் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய ஆங்கில மொழியோ சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார்.
ஆனால் எத்தனையோ தலைவர்கள் தேடி வந்து பேசிய வரலாறை நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம். ஆகவே அவற்றை நாங்கள் விமர்சிக்க தேவையில்லை.
அது மொழி என்பது ஒரு கொடை சட்டம் என்பது கிடைக்கின்ற கல்வி ரீதியான ஆற்றல் அவை இருக்கட்டும்.
ஆனால் தலைமைத்துவத்திற்கு அவர்களுடைய தைரியமும் மக்களை வழி நடத்துகின்ற பற்றும் இனம் மீதான சிந்தனையும் இருந்தால் அது ஒரு நல்ல தலைமைத்துவமாக வளரும் என குறிப்பிட்டார்.
என்னுடைய வழி வரைபடம் நான் ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தி புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைத்து, நிலத்திலே இருக்கின்ற எமது மக்களையும் புலம்பெயர் மக்களையும் ஒன்றாக ஒரு ராஜதந்திர உறவுகளோடு உலக நாடுகளில் குறிப்பாக பிராந்திய சக்தி சர்வதேச சக்திகளின் உடைய அனுசரணையோடு எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அடைவதற்கான பாதையை எவ்வாறு உருவாக வைப்பது என்பதற்கான ஒரு வழி வரவிடத்தை கொண்டு என்னுடைய பயணத்தை தொடர நான் விரும்புகின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்