மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் இணைந்து முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல், மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்துக்கான சூழல் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.
அதே நேரம் மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிமனை மற்றும் டெங்கு பரவல் அதிகமாக உள்ள  பகுதிகளில் பொதுமக்களின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் இம்மாதம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews