பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பாதைகளில், வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.