எட்டு இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும் ஏழை மக்களின் இணைப்புகள் என்பது தெரியவந்துள்ளது.

மின்வெட்டு காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றை அவர்கள் இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆபத்தான சமூக மட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை வழங்கும் விடயமாக இது அமையலாம் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews