வடமராட்சி கட்டைக்காட்டில் இன்று டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
முள்ளியான் கிராம சேவையாளர் கி.சுபகுமார்,சமுர்த்தி உத்தியோகஸ்தர் பாமினி,மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைந்து மருதங்கேணி சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்தனர்.
1. செ. நாகேந்திரம் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வைத்திய அதிகாரி பணிமனை மருதங்கேணி
2. பொ. யோகராஜ், ந.நிரூபன், செ. மதுஜன் பொது சுகாதார பரிசோதகர்கள் வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர்
ஒவ்வொரு வீட்டு சுற்றுச் சூழலையும் பரிசோதித்து நுளம்பு பெருக கூடிய இடங்களை கண்டறிந்து அதனை அகற்றியதோடு மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.
குறித்த பரிசோதனையில் எவருக்கும் எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலையில் பலருக்கு சிவப்பு நோட்டிஸ் விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் நேற்று ஒருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலையே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மருதங்கேணி பிரதேச சபையுடன் இணைந்து பொது இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.