அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவில் பாதி அதாவது 5000 ரூபா இம்மாதம் முதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்மொழிந்ததுடன் சம்பள அதிகரிப்பில் 5000 ரூபா எதிர்வரும் ஏப்ரல் மாதமும் மிகுதி 5000 ரூபா ஒக்டோபர் மாதம் முதலும் வழங்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி, அரச உத்தியோகத்தர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பில் ஜனவரி முதல் 5,000 ரூபாவையும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவையும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
Previous Article
உடனடியாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்!
Next Article
பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு: நால்வர் காயம்