சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த பிரதிநிதிகள் நாளை முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதற்காக இந்த குழு விஜயம் செய்யவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சுகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Next Article
நாளைய தினமும் வேலைநிறுத்த போராட்டம்