தொழிற்சங்க நடவடிக்கையால் சுகாதாரசேவைகள் ஸ்தம்பிதம்!!

அரசதாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35000 ரூபாய்கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி  நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறைபோராட்டம் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா பொதிவைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்றையதினம் பணிக்கு சமூகமளிக்காமையினால் வைத்தியசாலையின் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்திருந்தது.
குறிப்பாக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை எனவே, அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டகாறர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகரகள் பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ECG தொழில்நுட்ப நிபுணர்கள், EEG தொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews