பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான பிரித்தானிய இளவரசி அன்னே மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸ்மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(10) 1.15 மணியளவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இளவரசி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன் மேலும் கண்டி, யாழ்ப்பாணத்திற்கும் வரவுள்ளனர்.